Header Block Sinhala

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව

ජාතියේ ආරක්ෂකයා

15th March 2023 20:20:57 Hours

513 வது காலாட் பிரிகேட் படையினர் மாணவர்களின் கல்விக்கு ஊக்குவிப்பு

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ஸ்ரீ முருகன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் 51 வது காலாட் படைப்பிரிவின் 513 வது காலாட் பிரிகேட் சமூகம் நலன் சார்ந்த நலன்புரி திட்டங்களை முன்னெடுத்ததுடன், 1.2 மில்லியன் ரூபா செலவில் ஞாயிற்றுக்கிழமை (12) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வகுப்பில் கற்கும் 194 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் மற்றும் உபகரணங்களை விநியோகித்தது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களின் வேண்டுகோளின் பேரில் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர மற்றும் 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரிஸ்வி ராஷிக் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலும் இத்திட்டமானது, அந்த பிள்ளைகளின் பொருளாதார நெருக்கடிகள் ஸ்ரீ முருகன் அறக்கட்டளையின் தலைவர் திரு. ஆர் சுரேஷ் அவர்க்ளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கினார்.

11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சந்தன காரியவசம் மற்றும் அவரது படையினர் 513 வது காலாட் பிரிகேட் பகுதியின் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களில் படிப்பைத் தொடர்வதற்கு ஊக்கத்தொகைகளை வழங்கினர்.