Header Block Sinhala

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව

ජාතියේ ආරක්ෂකයා

12th May 2023 18:40:46 Hours

17 (தொ) கஜபா படையினர் ‘வெசாக்’ பண்டிகையை முன்னிட்டு குளிர்பானம் வழங்கல்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 17 வது (தொ) கஜபா படையணியின் படையினர், 17 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எல்ஏஎம்எல்டபிள்யூ பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெசாக் தினத்தன்று (மே 05) காலை வேளையில் நெடுங்கேணி – முள்ளியவளை பிரதான வீதியில் தாண்டுவன் சந்தியில் குளிர்பானங்களை வழங்கினர்.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 642 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசியுடன், இந்த சமூகம் நலன் சார்ந்த செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.