Header Block Sinhala

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව

ජාතියේ ආරක්ෂකයා

30th May 2023 21:38:31 Hours

142 வது காலாட் பிரிகேட் படையினரால் டெங்கு தடுப்பு திட்டம்

14 வது படைப்பிரிவின் 142 வது காலாட் பிரிகேட் படையினரால் மே 12 - 26 வரை பொலிஸ், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய தொண்டர்களுடன் இணைந்து பிலியந்தலை, மஹரகம, கொழும்பு 3 மற்றும் சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 142 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிக்காட்டலுக்கமைய படையினர், மேற்படி பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் நுளம்புகள் அதிகமாக பெருகும் பகுதிகளில் குப்பைகளை சேகரித்தனர்.

142 வது காலாட் பிரிகேட்டின் 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இந்த திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கினர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மஹரகம வைத்திய அதிகாரி காரியாலயம், மஹாநாம கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி - கொழும்பு, பொரலஸ்கமுவ வைத்திய அதிகாரி காரியாலயம், குணசிங்கபுர, புறக்கோட்டை, மாளிகாவத்தை, அளுத்கடை, புளூமெண்டல், மோதர, கொட்டாஞ்சேனை, மஹவத்தை , மட்டக்குளி மற்றும் பிலியந்தலை வைத்திய அதிகாரி காரியாலயம் பகுதிகளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

15 வது இலங்கை ட்ரோன் பீரங்கிப் படையணி, 21 வது இலங்கை சிங்கப் படையணி, 5 வது களப் பொறியியல் படையணி, 7 வது கெமுனு ஹேவா படையணி, 14 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 7 (தொ) கஜபா படையணியின் படையினர் இத் திட்டத்தில் இணைந்துகொண்டனர்.