Header Block Sinhala

ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව

ජාතියේ ආරක්ෂකයා

05th June 2023 19:42:03 Hours

துணுக்காய் பாடசாலை மைதானம் மற்றும் கரப்பந்து மைதானம் படையினரால் புனரமைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைபிரிவின் 651 வது காலாட் பிரிகேட்டின் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய இரண்டு திட்டங்களான தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு மைதானம் மற்றும் வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் என்பன புனரமைக்கப்பட்டன.

இத் திட்டம் 65 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஈஏடிபி எதிரிசிங்க மற்றும் 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்டிபிள்யூ பண்டார ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய படையினர் விளையாட்டு மைதானம் மற்றும் கரப்பந்து மைதானம் இரண்டையும் சில வாரங்களுக்குள் புனரமைத்தனர்.

வெற்றி தினமான மே 19 ஆம் திகதி போர்வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட 651 வது காலாட் பிரிகேட் தளபதி இரண்டு பாடசாலைகளுக்கும் சென்று வேலைத்திட்டங்கள் நிறைவடைந்ததை முறைப்படி அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்ஜே பிரேமதிலக அவர்கள் இரண்டு திட்டங்களையும் மேற்பார்வையிட்டதுடன், இரண்டு திட்டங்களுக்கும் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படையினரால் வழங்கப்பட்டன.

அந்தந்த பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் இராணுவத்தின் ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.