இராணுவ சிறப்பம்சம்

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி அகியவற்றின் கட்டளை அதிகாரிகளின் தலைமையின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 04 ஜனவரி 2025 அன்று இரண்டு பயனுள்ள நன்கொடை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.


கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினாரால் வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு 06 ஜனவரி 2025 அன்று பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் விஜய பராக்கிரம ஆரம்ப பாடசாலை மற்றும் திம்புலாகல களுகல பலட்டியாவ ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளின் 722 மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வை 05 ஜனவரி 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.


மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் 24வது படைத் தளபதியாக 2025 ஜனவரி 02 அன்று பனாகொட பீரங்கி படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.


592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா 29 டிசம்பர் 2024 அன்று பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎல்ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.


பருத்தித்துறை பாவற்கரை ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக 4வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளிக்கு 06 ஜனவரி 2025 அன்று கையளித்தார்.


விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கேஎடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 06 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் பிஏடிஆர்ஏசி விஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்எசீஜீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 06 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின் போது பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 39 வது பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


விசேட படையணி தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜனவரி 03 அன்று விசேட படையணி தலைமையகத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.


யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.