விசேட படையணியின் 28 வது ஆண்டு நிறைவு விழா

விசேட படையணி தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜனவரி 03 அன்று விசேட படையணி தலைமையகத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

இந்நிகழ்வை முன்னிட்டு நாவுல வைத்தியசாலையில் சிரமதான பணியும் முகாம் வளாகத்தில் போதி பூஜையும் இடம்பெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக மாலையில் இசை நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.