7th January 2025
இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் பிஏடிஆர்ஏசி விஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்எசீஜீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 06 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின் போது பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 39 வது பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் தனது கடமையை முறையாகப் பொறுப்பேற்று கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பிரிகேடியர் என்எச் மல்சிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பதிலாக இவர் கடமையேற்றார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந் நிகழ்வில் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இதர சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.