Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2024 12:19:15 Hours

51 வது காலாட் படைப்பிரிவு படையினரால் முத்துமாரி அம்மன் கோவிலின் தீர்த்த உற்சவத்திற்கு ஆதரவு

யாழ். காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க முத்துமாரி அம்மன் கோவிலின் தீர்த்த உற்சவம் மற்றும் பூஜை ஆகியவற்றில் பங்களிப்பதன் மூலம் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் யாழ் குடாநாட்டில் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதில் 24 பெப்ரவரி 2024 அன்று காங்கேசன்துறை கடற்கரையில் ஈடுபட்டனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் இந்நிகழ்வுக்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவினர்.