20th February 2024 17:03:29 Hours
8 வது இலேசாயுத காலாட் படையணி இலங்கை தொம்பே சுரகிமு பௌத்த சங்கத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் 'துருகெபகரு மர நடுகைத் திட்டத்தின் கீழ் 2024 பெப்ரவரி 16 அன்று, பலுகம மஹாமேவன தியான இல்லத்தில் 500 மூலிகை மரக்கன்றுகளை நாட்டப்பட்டது.
'துருகெபகரு மர நடுகைத் திட்டத்திற்கான அனுசரணையினை எஸ்-லோன் லங்கா (S-Lon Lanka) தனியார் நிறுவனம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பினால் வழங்கப்பட்டது. மேலும், தொம்பே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டமானது 8 வது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் மகாசங்கத்தினர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.