Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2024 19:06:51 Hours

மன்னார் இராணுவ கள வைத்தியசாலைக்கு வைத்தியசாலை சேவைகள் சபையினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

மருத்துவமனை சேவைகள் பேரவை சமீபத்தில் 54 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பின் கீழ் மன்னார் இராணுவ கள வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (13 பெப்ரவரி 2024) வைத்தியசாலை வளாகத்தில் ரூ. 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதேவேளை, பிரதேசத்தில் உள்ள தகுதியான ஐந்து குடும்பங்களுக்கு ஐந்து சூரியமின் கலங்களும் வழங்கப்பட்டன. மருத்துவமனை சேவைகள் பேரவை பணிப்பாளர் வண. ரஜவெல்ல சுபுதி தேரோவின் உதவியில் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை சேவைகள் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.