19th February 2024 18:56:46 Hours
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 64 வது காலாட் படைப்பிரிவு படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான மற்றொரு ஒருங்கிணைப்பு கூட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் வியாழக்கிழமை (2024 பெப்ரவரி 15) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் முந்தைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், மாவட்ட வன அதிகாரி மற்றும் துணுக்காய் பிரதி வலய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோர் இச்சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.