Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2024 15:15:22 Hours

இராணுவப் பொலிஸ் படையணியின் சேவை வனிதையரால் அபய சிறுவர் இல்லத்திற்கு நன்கொடை

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா மற்றும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எ.சீ.எ டி செய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 2024 பெப்ரவரி 14 அன்று அனுராதபுரம் அபய சிறுவர் இல்லத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் ஊடாக 50 மாணவர்களுக்கு தலா ரூ. 8,000.00. பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அனுசரனையாளர் குழுவினரால் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.