09th February 2024 11:42:49 Hours
211 வது காலாட் பிரிகேட் படையினர் 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2024 பெப்ரவரி 04 ஆம் திகதி பதவிய, வெஹரதன்னவில் வசிக்கும் தகுதியுடைய 50 மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா அவர்கள் (ஓய்வு) அனுசரணை வழங்கியதுடன், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.