06th February 2024 15:27:45 Hours
கந்தேயாய மெத்தாராம விகாரையின் பிரதம தேரரான வண. தியதொர மெத்தானந்த தேரர் தலைமையிலான 16 பௌத்த பிக்குகள் சிவனொளிபாத யாத்திரையை 2024 ஜனவரி 31 மேற்கொண்டனர். இதன்போது 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 06 படையினரால் அவர்களின் முழு பயணத்திற்குமான பாதுகாப்பு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டன.
அவர்களின் புனித யாத்திரையை வெற்றிகரமாக முடிக்க தேவையான அனைத்து உதவிகளை வழங்குவதற்கான வழிக்காட்டல்களை 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி வழங்கியிருந்தார்.