Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2024 17:25:36 Hours

68 வது படைப்பிரிவு படையினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேசை மற்றும் உலர் உணவு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு சாப்பாட்டு மேசை மற்றும் உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்ச்சியை 2024 ஜனவரி 30 அன்று 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியில் 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களினால் நன்கொடை வழங்கப்பட்டதுடன், உள்நாட்டு பொருட்களைப் பயன்படுத்தி படையினர் தளபாடங்களை தயாரித்தனர். உலர் உணவு பொதிகள் 68 வது காலாட் படைப்பிரிவின் நிதியுதவியுடன் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.