Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2024 16:11:00 Hours

மின்னேரிய கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி படையினருக்கு ‘தேனீ வளர்ப்பு’ பற்றிய அறுவூட்டல்

கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி படையினருக்கு 'தேனீ வளர்ப்பு' என்ற தொனிப்பொருளின் கீழ் விரிவுரையை 2024 ஜனவரி 31 அன்று மின்னேரிய 3 வது இலங்கை போர்க் கருவி படையணி தலைமையகத்தில் தேனீ வளர்ப்பின் நன்மை மற்றும் நுட்பங்கள் குறித்து வீரர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.

பிகு சம்பத சுரகிமு அமைப்பின் பிரதிநிதியான திரு.டி.பி.தம்பவிட்ட அவர்கள் விரிவுரைக்கு தலைமை தாங்கினார். இப்பட்டரையில் 95 பேர் கலந்து கொண்டனர்.