31st January 2024 20:05:41 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 ஜனவரி 28 ஆம் திகதி புதுக்குடியிருப்புப் பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
68 வது காலாட் படைப்பிரிவினால் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட கண் பரிசோதனை மூலம் தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைப்பாடுள்ள 107 பொதுமக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி அவர்கள் இத்திட்டத்தை ஒருங்கிணைத்ததுடன், உதவி மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி அமைப்பின் செயலாளர் வைத்தியர். வி சவேஸ்வரன் அவர்களினால் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவி வழங்கப்பட்டது. இச் சமூக சேவை திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.