31st January 2024 19:41:55 Hours
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு 03, பிஷப் கல்லூரியின் 19 மாணவர்களுக்கு மத்தேகொடை இலங்கை பொறியியல் படைப்பிரிவில் விசேட ஒரு நாள் தலைமைத்துவப் பயிற்சி வெள்ளிக்கிழமை (26) வழங்கப்பட்டது.
இத்திட்டம் மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு, குழுப்பணி மற்றும் குழுவை உருவாக்கும் திறன், ஆளுமை மற்றும் சமூக நெறிமுறை ஆகியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசீர்வாதத்துடன், பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த நாள் தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.