Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 14:45:35 Hours

10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி சமூக சேவையில்

10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் சமீபத்தில் மக்கள் நலனுக்கான சமூக சேவை முயற்சிகளில் ஈடுபட்டு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.

ஜனவரி 15 அன்று, முருங்கன் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் கோவில் வளாகத்தில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.

அதேவேளை, ஜனவரி 20 அன்று, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் முழங்காவில் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர். மருத்துவமனை ஊழியர்களின் உதவுயுடன் படையினர் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்தனர்.