Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2024 19:58:57 Hours

9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் "சஹன செவன" க்கு மதிய உணவு

9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால், படையணியின் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் அனைத்து வீரர்களையும் நினைவுகூரும் வகையில், புதன் கிழமை (ஜனவரி 17) சேருவாவில "சஹன செவன" புனர்வாழ்வு மற்றும் பயிற்சி நிலையத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக 222 வது காலாட் பிரிகேட் தளபதி கலந்துகொண்டதுடன், 9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.