22nd January 2024 20:20:30 Hours
கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி படையினர் மெதகம வித்தியாலயம், அரலகங்விலகந்தேகம வித்தியாலய மற்றும் அலவகுபுர மீனவ கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு 20 ஜனவரி 2024 அன்று அந்தந்த பாடசாலை வளாகத்தில் பள்ளி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வில் பிரிகேடியர் டப்ளியூஎம்எஸ்என் விஜேகோன் என்டிசி ஏஏடீஓ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் என்போர் கலந்துகொண்டனர்.