19th January 2024 15:28:09 Hours
பொறியியல் சேவைகள் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபால தலைமையில், பொறியியல் சேவைகள் படையணியில் சேவை செய்யும் தகுதியான இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களின் பிள்ளைகளின் நலனுக்காக மேலும் ஒரு நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனவரி 15 அன்று, 12 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் சேவை செய்யும் சிவில் ஊழியர்களின் பாடசாலை சிறுவர்களுக்கு பயனளிக்கும் வகையில் எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொருட்களின் விநியோகம் பொறியியல் சேவைகள் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், ஒரு அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு அவரது மகளின் கண் புற்று நோயிற்கான அவசர எம்ஆர்ஐ ஸ்கேன் தேவைக்காக ரூபா 100,000/- நிதி நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடை ஜனவரி 9 ம் திகதியன்று 6 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியில் வழங்கப்பட்டது. இந்த நன்கொடையானது பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தேவைப்படுபவர்களுக்கான பயனுள்ள ஆதரவை சரியான நேரத்தில் வழங்குகின்றது என்பதை குறித்து நிற்கின்றது.
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பொறியியல் சேவைகள் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.