06th January 2024 17:01:45 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணியின் படையினர் சூரியபுர கிராம சேவைப் பிரிவில் மகாவலி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்து வருவதையடுத்து, 4.7 கிலோமீற்றர் நீளத்திற்கு மணல் மூட்டைகளை வைத்து கரையினை வலுப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த கூட்டு முயற்சியில் 35 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். இத் திட்டம் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 222 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்டது.