01st January 2024 18:28:51 Hours
4 வது கெமுனு ஹேவா படையணி அதன் கட்டளை அதிகாரியுடன் இணைந்து 26 டிசம்பர் 2023 அன்று சத்துருகொண்டானில் உள்ள ஓசானம் நிலையத்திற்கு குழந்தைகளுக்கான தேவையுடைய பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ. 35,000/= மதிப்புமிக்க சுகாதார பொருட்கள் 26 சிறுவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டன. 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்களின் தனிப்பட்ட நிதி மூலம் இந்த திட்டம் சாத்தியமானது.
இந்த நிகழ்வில் 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.பீ.ஐ.எச்.சேனாநாயக்க மற்றும் அவரது மனைவி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான சுகாதாரப் பொருட்களை அவர்களின் சார்பாக நிலையத்தின் முகாமையாளர் திருமதி யு அர்னால்ட் வத்சல அவர்கள் பெற்றுக்கொண்டார்.