Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2023 23:00:21 Hours

மேலும் உடல் பயிற்சி பயிற்றுனர்கள் விடுகை

அதிகாரிகளுக்கான உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி -16, சிப்பாய்களுக்கான உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 46, சிப்பாய்களுக்கான உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 130 மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழிற் தகமை 4 தகுதி பெற்ற நீச்சல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 26 ஆகியவற்றின் விடுகை அணிவகுப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் டிசம்பர் 20 அன்று பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வில் இராணுவ உடற் பயிற்சி நிலைய தளபதி கேணல் பிகேஎஸ்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ கலந்து கொண்டார்.

11 அதிகாரிகள் மற்றும் 169 சிப்பாய்கள் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாக தகுதி பெற்றனர், மேலும் 28 சிப்பாய்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக பயிற்சியின் பின்னர் நீச்சல் பயிற்றுவிப்பாளர்களாக சான்றிதழ் பெற்றனர்.

சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விடுகை அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.