13th December 2023 21:26:13 Hours
யாழ் நாவட்குழி 'லக்தரு' பாலர் பாடசாலையின் முதல் கலைவிழா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) நடாத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப் பிரிவின் 11 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் உதவி வழங்கப்பட்டது.
நாவட்குழி கிராமம் யாழ் குடாநாட்டின் ஒரேயொரு சிங்கள மக்கள் வாழும் கிராமமாகும். வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிள்ளை பருவ கல்வி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சகல சிறார்களின் பங்களிப்புடன் வருடாந்த கலை விழா முதன்முறையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நலன் விரும்பிகள் குழுவின் ரூ. 90,000/= பெறுமதியான நன்கொடையில் சிறார்களுக்கான எழுதுபொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை சீருடைகள் மற்றும் எழுதுபொருட்களுக்கு தியாகி அறக்கட்டளை 175,000.00 ரூபா நன்கொடையை வழங்கியது. யாழ் இசைக்குழுவினருக்கான இசைப் பொருட்கள் மற்றும் முதலுதவி பெட்டிட்கான யாழ் 'தவம்' அறக்கட்டளையினரால் 125,000.00 ரூபா வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான சீருடைகளுக்காக 52 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் ஒருங்கிணைப்பு மற்றும் படையினரின் ஆதரவுடன் ஆவுஸ்ரேலியா இமேஜிங் காம்பாஷன் இன்டர்நேஷனல் பிஎல்சி அவர்களால் ரூ. 50,000.00 நன்கொடையும் வழங்கப்பட்டது.
52 வது காலாட் படை பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்த கலை விழாவைகண்டுகளித்தனர்.