07th December 2023 19:06:27 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் உணவக கழகம் அங்கத்தவரகளுக்கு திங்கட்கிழமை (04 டிசம்பர் 2023) இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் விரிவுரை நடத்தப்பட்டது.
இராணுவ அதிகாரிகளின் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கில் "வாழ்க்கை சவால்கள் மற்றும் சமநிலை ஆளுமை" என்ற தலைப்பில் அதிதி பேச்சாளர் பேராசிரியர் மொஹமட் மஹீஸ் அவர்கள் விரிவுரையினை நடாத்தினார். அதில் அவர் இராணுவ அதிகாரிகளின் வாழ்க்கையின் யதார்த்தங்கள், சவால்கள், அணுகுமுறைகள் குறித்தும் விளக்கினார்.
விரிவுரையில் கேள்வி பதில் மற்றும் விளக்கங்கள் தொடர்பாக பேச்சாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பை பங்கேற்பாளர்கள் பெற்றனர்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.