05th December 2023 19:00:22 Hours
இராணுவக் கொள்வனவு நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித்து இராணுவ பொலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் ஆதிகாரவாணையற்ற அதிகாரிகளின் அறிவை விரிவுபடுத்துவதற்காக, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் 'கொள்முதல் நடைமுறைகள்' குறித்த இரண்டு நாள் செயலமர்வு நவம்பர் 22-23 ம் திகதிகளில் இடம்பெற்றது.
மொத்தமாக, நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் 14 அதிகாரிகள் மற்றும் 52 ஆதிகாரவாணையற்ற அதிகாரிகள் அமர்வுகளில் பங்குபற்றியதுடன், 'கொள்முதல் நடைமுறை அறிமுகம்', 'கொள்முதல் முறைகள்', 'ஏலங்களை அழைக்கும் மற்றும் திறக்கும் முறை', விலைமனு நடைமுறைகள், மதிப்பீடு, கணக்கு அறிக்கைகளை பேணல்,மதிப்பீடு சபை, மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் இங்கு பயிற்றுவிக்கப்பட்டன.
ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரினால் தொடக்க உரை ஆற்றப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. ஜி.எஸ்.கே சமரதுங்க அவர்களினால் மிகவும் தகுதி வாய்ந்த அறிவுசார் விரிவுரை வழங்கப்பட்டது. விரிவுரையாளர் தனது அனுபவங்களுடன் அறிவைப் பகிர்ந்து கொண்டதுடன், பங்குபற்றியவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இக்கருத்தரங்கு இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில், நிலைய தளபதி, இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.