05th December 2023 19:04:48 Hours
இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 28 நவம்பர் 2023 இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக படையினருக்கு வெதுப்பக தயாரிப்புகள் என்ற தலைப்பில் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் வெதுப்பக துறை பற்றிய அறிவை விரிவுபடுத்தவும், அவர்களின் ஓய்வின் பின்னர் பயிற்சி பெற்ற / திறமையான கைவினைஞர்களாக பணியாற்றுவதற்கான அவர்களின் திறன்களை மேம்படுத்துவது இச் செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் துறையில் கள அனுபவம் உள்ள மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்களான பிரிமா சிலோன் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.ஹேமந்த கருணாரத்ன மற்றும் திரு. அசேல நாமல் பண்டார ஆகியோரினால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
அமர்வுகளின் போது, விரிவுரையாளர்கள் இத்துறையில் தங்களின் அனுபவங்களுடன் தங்கள் அறிவைப் பகிர்ந்துகொண்டதுடன், இத்துறையில் உள்ள சில அனுகூலங்களை எடுத்துரைத்தனர். பங்கேற்பாளர்களை ஓய்வுக்குப் பிறகு வெதுப்பக துறையில் பரந்த அளவிலான தொழில் வாய்ப்புகளைப் பெற ஊக்குவித்தனர்.
வெதுப்பக உற்பத்தித் துறையில் பணியமர்த்தப்பட்ட 02 அதிகாரிகளும், 18 அதிகாரவாணையற்ற அதிகாரிகளும் இந்தசெயலமர்வில் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தில் வெதுப்பக கலவைகள் தயாரித்தல், பொருட்களைப் பயன்படுத்துதல், உபகரணங்களைப் பயன்படுத்துதல், பொதியிடல் நுட்பங்கள் மற்றும் உயர்தர தயாரிப்புகளை வழங்குதல் என்பவை அடங்கியிருந்தன.
செயலமர்வின் முடிவில், சில முக்கியமானர்களுக்கு உணவு வழங்கும் முறை பற்றி பயிற்சியளித்ததுடன், பங்கேற்பாளர்களுடன் அவர்களின் அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள ஊடாடும் அமர்வும் நடத்தப்பட்டது.