Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2023 21:35:56 Hours

கிறிஸ்துவ தேவாலயம் புணரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 222 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணி படையினர் சீனிபுர பிரதேசத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கைவிடப்பட்டிருந்த கிறிஸ்துவ தேவாலயத்தை முழுமையாக புணரமைத்து வர்ணம் பூசி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) முதலாவது தேவ ஆராதனை நடத்தியதன் மூலம் அது புனிதப்படுத்தப்பட்டது.

முன்னாள் சீனிபுர சர்க்கரை ஆலை வளாகத்திற்குள் இருந்த கிறிஸ்ட் தி கிங் தேவாலயம், தேவ ஆராதனைகளை தொடர்ந்து நடத்துவதற்கு நிதி இல்லாததால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல், கைவிடப்பட்டிருந்தது.

5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணியின் படையினர் 222 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்.கே.ஏ.ஆர்.பீ ரத்னாயக்க மற்றும் 5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டப்ளியூ.டப்ளியூ.எம்.பீ.பி வெகடபொல ஆகியோரின் வழிக்காட்டலில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் தேவாலயம் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசி முழுமையாக புனரமைக்கப்பட்டது.