02nd December 2023 10:32:09 Hours
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சியில் இருக்கும் செனகல் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட பாடநெறி 92,92பி மற்றும் குறுகிய பாடநெறி 20 என்பவற்றின் பயிளிலவல் அதிகாரிகள் குழு, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எல்,எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களை திங்கட்கிழமை 20 நவம்பர் 2023 இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிளிலவல் அதிகாரிகளின் இறுதி விளக்கக்காட்சி ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளரின் அறிவார்ந்த கருத்துக்களைப் பெறுவதற்காக, ‘இலங்கை இராணுவத்தின் ஐ.நா அமைதி காக்கும் திறன்களை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளரை நேர்காணல் செய்தனர்.
அன்றைய திட்டத்தின் கீழ், தற்போதுள்ள ஐ.நா அமைதி காக்கும் பணிகளின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பயிளிலவல் அதிகாரிகளுக்கு அறிவூட்டுவதற்காக ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர், ஆய்வுத் தலைப்பில் பல்வேறு கேள்விகள் பயிளிலவல் அதிகாரிகள் மற்றும் வருகை தந்த பணியாளர்களினால் கேட்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில், அனைத்து பயிளிலவல் அதிகாரிகளுக்கும் எதிர்கால முயற்சிகளுக்கு பணிப்பகத்தின் அனைத்து பணியாளர்கள் சார்பாகவும் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.