26th November 2023 22:44:26 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாணவர்களிடையே அடுத்த ஆண்டிற்கான (2024) பாடசாலை உபகரணப்பெருட்களை அம்பாந்தோட்டை யஹங்கல ஆரம்பப் பாடசாலயில் நவம்பர் 23 ஆம் திகதி வழங்கினர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்ஹ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்களுடன் கோட்டேயைச் சேர்ந்த பரோபகாரி திரு. ரணில் பெரேராவுடன் இணைந்து இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதிப் பங்களிப்பை வழங்கினார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உதவி மாவட்ட செயலாளர் திரு.சந்தன ரத்நாயக்க, அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.