26th November 2023 10:28:00 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கதிரவெளியில் உள்ள விக்னேஸ்வரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ‘சட்டவிரோத போதைப்பொருள் பாவனையின் அபாயகரமான விளைவுகள்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, மட்டக்களப்பு தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதான இணைப்பாளர் திரு.பீ.தினேஷ் அவர்களால் நடாத்தப்பட்ட பெறுமதிமிக்க விரிவுரையில் பாடசாலையின் 300 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் கட்டளை அதிகாரி ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.