Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2023 10:37:47 Hours

21 வது காலாட் படைப்பிரிவு படையினருக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுக்கான நடைமுறை செயல்விளக்கம் மற்றும் செயலமர்வுகள் நவம்பர் 5-17 வரை அனுராதபுரம் மல்வத்துஓயா மற்றும் கல்பாலம ஆகியவற்றின் அருகில் நடாத்தப்பட்டது. அவசர வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பேரழிவை ஏற்படுத்துகின்ற தொடர் மழையினால் அப்பகுதியில் ஏதேனும் பெரிய வெள்ளம் ஏற்பட்டால் அனர்த்த மீட்பு முறைகள் தொடர்பில் படையினருக்கு அறிவூட்டுவது இதன் நோக்கமாகும்.

இராணுவத்தின் கம்பளை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தின் 8 பயிற்றுனர்கள் விரிவுரைகள் மற்றும் செயல்விளக்கங்களுடன் அடிப்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், அலைகளை கண்டறிதல், முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நுட்பங்கள், நீரில் மூழ்கிய ஒருவரை மீட்டல், அவரை நபரை பாதுகாப்பாக அழைத்து வருதல், மோட்டார் படகுகளை இயக்குதல் போன்றவற்றில் அறிவூட்டினர்.

படைப்பிரிவின் கட்டளை படையலகுகளின் 8 அதிகாரிகள் மற்றும் 160 சிப்பாய்கள் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர்.