26th November 2023 10:23:04 Hours
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி - 48 இன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 21 அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இராணுவத்தின் பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 53 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத கால பயிற்சியை நிறைவுசெய்தனர். 3 வது இலங்கை கவச வாகன படையணியின் சார்ஜன் பி.ஜி.கே.ஆர்.பண்டார பாடநெறியில் சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
இப் பரிசளிப்பு விழாவில் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்கேஏடி சந்திரமால் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.