26th November 2023 10:32:21 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 612 வது காலாட் பிரிகேடின் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் மீகஸ்தென்ன சமனலவத்த நிப்போன் புத்த விகாரையை வர்ணம் பூசி புனரமைப்பதற்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் உதவிகளை வழங்கினர்.
இத்திட்டம் 2023 நவம்பர் 1-20 வரை விகாரையின் தலைமை பீடாதிபதியுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்டது. 612 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியுடன் இணைந்து திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.