20th November 2023 20:06:17 Hours
நாகாநந்தா சர்வதேச பௌத்த நிலையத்தின் கற்கைகளுக்கான நிறுவனத்தின் உபவேந்தரும், தாய்வானுக்கான பிரதம சங்க நாயக்கருமான வண. கலாநிதி போதகம சண்திமநாயக்க தேரவின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சனிக்கிழமை (நவம்பர் 18) பொல்லேகல, மானெல்வத்தையில் உள்ள நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான நிறுவனத்தின் நாடளாவிய ரீதியில் 5000 பௌத்த கன்னியாஸ்திரிகளின் ஒன்றுகூடலுக்கு பரிஷ்கர' மற்றும் தானம் வழங்கும் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டார்.
அன்றைய வேலைத்திட்டத்தின் பிரதான பகுதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வண. கலாநிதி போதகம சண்திமநாயக்க தேரர் மற்றும் வண. உடுவே தம்மாலோக தேரர், வதிவிட மாணவ பிக்குகளுக்கான நான்கு மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டிட திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுத்தனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அடையாள நாடாவை வெட்டி திறந்துவைத்ததுடன் வளாகத்தில் உள்ள புதிய உட்கட்டமைப்பு வசதியை பார்வையிட்டார்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் 7 வது இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி படையினர் தங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்கி புதிய நான்கு மாடி கட்டிடத்தை நிர்மாணித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கன்னியாஸ்திரிகளுக்கு தானம் மற்றும் 'பிரிகர' வழங்குவதில் இராணுவத் தளபதி கலந்துகொண்டார்.