20th November 2023 20:01:58 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப் பிரிவின் 522 வது பிரிகேடின் பகுதியில் உள்ள சமய ஸ்தலங்களின் தேவைகளைத் ஆராயும் பொருட்டும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் கடைக்காடு புனித மேரி தேவாலய வளாகத்தில் 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதேவேளை, புனித மரியாள் தேவாலய வளாகத்தினுள் இப் பொதுமக்களின் பங்களிப்புடன் தனியான மரம் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1 வது இயந்திரவியற் காலாட் படையணி படையினர் திட்டத்தை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மணல்காடு நாகதம்பிரான் தேவாலய பாதிரியார் அருட்தந்தை அமல்ராஜ், புனித மரியாள் தேவாலய பாதிரியார் வண.ஜோன் கிரஷ், வண. கரோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ அவர்கள் மதகுருமார்களுடன் மதம் சார்ந்தவர்களின் நலன் கருதி கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னர் இந்த சமூகம் சார்ந்த திட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக 522 வது காலாட் பிரிகேட் தளபதியும், 1 வது இயந்திரவியற் காலாட் படையணி கட்டளை அதிகாரியும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்வில் கடைக்காடு அரச பாடசாலை அதிபர், முள்ளியன் கிராம சேவை பிரிவு கிராம சேவை அதிகாரி மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.