18th November 2023 20:21:29 Hours
உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு நவம்பர் 13-16 ஆம் திகதிகளில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் படையினருக்கான விழிப்புணர்வு விரிவுரைகள், விசேட மருத்துவ அலோசனைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
விழிப்புணர்வு விரிவுரைகள், சிறப்பு மருத்துவ அலோசனைகள் மூலம் 'நீரிழிவை' தடுக்கும் நோக்கத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் 'ஆரோக்கியமான இராணுவம்-ஆரோக்கியமான தேசம்' எனும் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்தன யுஎஸ்பீ அவர்கள் தலைமையிலான உடலியல் வைத்திய நிபுணர் கமல் ஆரியசிங்க மற்றும் உடலியல் வைத்திய நிபுணர் டி.ஆர்.கே.தயாரத்ன உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு விரிவுரைகளை நடத்தினார். மேலும் உளவியல் ஆலோசனை சேவை, கண் ஆலோசனை சேவை, பல் ஆலோசனை சேவை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மற்றொரு தொடர் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
அந்த ஏற்பாடுகளில் மேற்கு பாதுகாப்பு படையினர், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.