Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2023 20:18:06 Hours

இலங்கை கவச வாகனப் படையணியின் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் அவர்களுக்கு பாராட்டு

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் புதிதாக நிலை உயர்வு பெற்ற விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு புதன்கிழமை (நவம்பர் 08) இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி தலைமையகமான ரெக் ஹவுஸில் கௌரவிக்கப்பட்டார்.

முதலில், படையணி தலைமையக படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ கவச வாகனப் படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படையினருக்கு உரையாற்றுகையில் மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பல அனுபவங்கள், சவால்கள் மற்றும் மனநிறைவுகள் நிறைந்த தனது தொழில் வெற்றிக்கு வழி வகுத்த அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவின் சிப்பாய்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி தலைமையகத்தில் அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விழாவில் கலந்து கொண்டனர்.