14th November 2023 22:01:29 Hours
வெலிஓயாவை தளமாகக் கொண்ட 211 காலாட் பிரிகேட் தனது 39வது ஆண்டு நிகழ்வை 2023 நவம்பர் 11 அன்று 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடியது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு, 211 வது காலாட் பிரிகேட் படையினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) ருவன்வெலி மஹா சேய வளாகத்தில் பால்சோறு தானம் வழங்கினர். இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்டு நிறைவு நாளில் (11), இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, 211வது காலாட் பிரிகேடினர் முகாம் வளாகத்தை வந்தடைந்த பிரிகேட் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தினர்.
பின்னர், பிரிகேட் தளபதி அலுவலக வளாகத்திற்கு முன்பாக மாங்கன்று நட்டுவைத்தார். பின்னர் குழுபடம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவும் வழங்கப்பட்டது. மாலை இன்னிசை நிகழ்வுடன் ஆண்டுவிழா நிறைவடைந்தது.
பிரிகேட்டின் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் ,கட்டளை அதிகாரிகள் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.