13th November 2023 20:21:53 Hours
2 (தொ) வது இலங்கைப் பொதுச் சேவைப் படையணியின் படையினரின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன், பனாகொட இராணுவ வளாகத்தில் அதன் கட்டளை அதிகாரியான மேஜர் பீ.டி.எஸ்.என் குணரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் திறந்த அரங்கு உருவாக்கப்பட்டது.
2023 நவம்பர் 09 ஆம் திகதி இந்த திறந்த வெளி அரங்கு கட்டளை அதிகாரியால் திறந்து வைக்கப்பட்டது. நடனம் மற்றும் பாடல்கள் நிகழ்வை அலங்ரித்தன. இத்திட்டத்திற்கு இலங்கைப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதி தனது முழு ஆதரவை வழங்கியிருந்தார்.