13th November 2023 20:29:43 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் 8 வது கெமுனு ஹேவா படையினர் பலாங்கொடையில் உடவெல, ஹொரங்காதுரு பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை பலாங்கொடை அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) மாலை பெய்த அடைமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதால், இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் வீட்டுடன் புதையுண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக, படையினர் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று, மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 8 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அவரது படையினர் இன்னும் தங்கள் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்துவருகின்றனர்.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 611 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.