10th November 2023 21:53:03 Hours
2009 மே மாதத்திற்கு முன்னர் போர் வீரர்களுடன் இணைந்து போராடி உயிர் நீர்த்த இலங்கை இராணுவ மகளிர் படையணியின் வீராங்கனைகளின் நினைவாக புதிய நினைவுத் தூபி பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்டதுடன் நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத்தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த போர் வீராங்கனைகளின் நினைவு தூபியை திறந்து வைத்தார்.
இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் வீரமரணமடைந்த போர் வீராங்கனைகளின் புதிய நினைவுத் தூபிக்கு முன்பாக அனைவரும் மத அனுஷ்டானங்களில் இணைந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து புதிய நினைவு தூபியின் பதாகையை திறந்து வைப்பதற்காக அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அழைக்கப்பட்டார்.
பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், ரண பெரா மற்றும் பியுகல் வாசிப்புடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வீரமரணமடைந்த 25 பெண் வீராங்கனைகளின் நினைவைப் போற்றும் வகையில் மெல்லிசையும் இசைக்கப்பட்டது.
அதன் பின்னர், இராணுவத் தளபதி புதிய நினைவுச் தூபியினை பார்வையிட்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 25 வீரமரணமடைந்த வீராங்கனைகளின் உறவினர்களுடன் இணைந்து நினைவுத்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரெவில் ஒலியுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
பின்னர், வருகை தந்த அனைவரும் இராணுவத் தளபதியுடனான தேநீர் விருந்துபசாரத்துடன் கலந்து கொண்டதுடன், இராணுவத் தளபதி வீரமரணமடைந்த 25 போர் வீராங்கனைகளின் உறவினர்களுடன் உரையாடினார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ மகளிர் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு போர் வீராங்கனைகளின் விலைமதிப்பற்ற தியாகங்களுக்கு அழியா நினைவாக இருக்கும்.
உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜே.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் உயிர் நீர்த்த 25 போர் வீராங்கனைகளின் உறவினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.