09th November 2023 20:49:12 Hours
இலங்கை விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவையின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் களப் பொறியியலாளருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய 14 வது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பொறியியல் படையினரால் அறிமுகப் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் முதன்மை நோக்கம், தற்போது விமானப் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குக் அறிவூட்டுவதாகும்.
இப் பயிற்சியில் மொத்தம் 145 பயிற்சியாளர்கள் சனிக்கிழமை (நவம்பர் 4) மத்தேகொட 14 வது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பொறியியல் படையணி வளாகத்தில் பங்குபற்றினர். பாடத்திட்டத்தின் விரிவாக்கமானது பாதுகாப்பின் அடிப்படைகள், வெடிமருந்துகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களின் அடிப்படைகள், இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றின் தாக்கம் தொடர்பான அறிவு, விமான நிலைய பாதுகாப்பு என்பவை தொடர்பானதாகும்.
பயிற்சியின் சிறப்பம்சமாக, பயிற்சியாளர்களுக்கு வெடிபொருட்களின் மாதிரிகள் மற்றும் கண்காட்சி, வெடிபொருள்,வெடிப்பு போன்ற அனுபவமும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பயிற்சியாளர்கள் 14 வது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பொறியியல் படையணியில் பயன்படுத்தும் அதிநவீன வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் மற்றும் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி உபகரணங்களை ஆய்வு செய்யும் முறையையும் பார்வையிட்டனர்.
இந்த பயிற்சி தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் நிபுணத்துவத்துடன் வழிநடத்தப்பட்டது. பொறியியல் படைப்பிரிவின் கேணல் பொது பணி மற்றும் 14 வது இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையில் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி உபகரணங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.