09th November 2023 20:39:41 Hours
இலங்கைக்கு வருகை தந்துள்ள ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் தலைமையிலான பசிபிக் பிராந்திய விசேட நடவடிக்கை கட்டளைகள் தூது குழுவினர் இன்று (9 நவம்பர்) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்ததுடன் இராணுவ பயிற்சி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, இரு இராணுவ அதிகாரிகளும் எதிர்கால பயிற்சி திட்டங்கள் மற்றும் ஹவாயை தளமாகக் கொண்ட பசிபிக் விசேட நடவடிக்கைக் கட்டளையுடன் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், அமெரிக்காவின் பசிபிக் கட்டளை, பசிபிக் கட்டளை விரிவாக்க குழு, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் நெல்சன், லெப்டினன் ஹமில்டன் மற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் இரிஷ் ஆகியோர் தளபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து அவர்களாலும் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ. டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.கே.எஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.