08th November 2023 22:27:58 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் ஏற்பாட்டில் யாழ். தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியால மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை (நவம்பர் 6) முன்னெடுக்கப்பட்டது.
521 வது காலாட் பிரிகேட் 11 வது விஜயபாகு காலாட் படையினருடன் இணைந்து படைப் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் ஆலோசனைபடி யாழ். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெப்டினன் கேணல் ஒ.ஆர்எஸ் குமார அவர்கள் மாணவர்களுக்கான விரிவுரையை ஒருங்கிணைத்தார்.
தத்துவம் மற்றும் உளவியல் ஆலோசகர், வண. அருட்தந்தை சல்வமோரியானு ஜே நிர்மல் சுரஞ்சன் அவர்கள் அறிவை வளர்ப்பதற்காக தனது அறிவை பகிர்ந்துகொண்டார்.