08th November 2023 22:24:34 Hours
4 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் அண்மையில் புனானி பயிற்சிப் பாடசாலையில் தமது படையலகு பயிற்சி நெறியை நிறைவுசெய்ததுடன் அதன் நிறைவு விழா திங்கட்கிழமை (நவம்பர் 06) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி நிறைவுரை ஆற்றினார்.
கிழக்குப் பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, 232 வது காலாட் பிரிகேட் தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவின் பணி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாடநெறியில் சாதனை படைத்தவர்கள் பின்வருமாறு:
சிறந்த அணி - சார்லி
சிறந்த குழுப்பணி - பிராவோ
சிறந்த மாணவன் - சார்ஜன் எம்.ஆர் கெலும்சந்தன
சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் - கோப்ரல் பீ.எம் வீரக்கொடி
சிறந்த உடற் தகுதி வீரர் - லான்ஸ் கோப்ரல் டி.எம்.எம் திசாநாயக்க