07th November 2023 00:17:23 Hours
பங்களாதேஷ், பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், கியூபா, எகிப்து, இத்தாலி, நேபாளம், பாகிஸ்தான், பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் இந்தியக் ஆகிய நாடுகளுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பத்து புதிய தூதுவர்கள் சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 05) சிறப்பு நோக்குநிலை நிகழ்ச்சியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
வருகை தந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஆர் கே ஹெட்டியரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
அதன் பின்னர், வடக்கிலுள்ள முப்படைத் தளபதிகளுக்கும் வருகை தந்தவர்களுக்கும் இடையிலான விரிவான விளக்கமளிப்பு மற்றும் கலந்துரையாடலின் போது, வட மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை, சிவில் இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி உதவி மற்றும் நல்லிணக்கத் திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வடமாகாண முப்படைகளின் தளபதிகள், பிரதான பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.