02nd November 2023 12:08:17 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 33 வது ஆண்டு விழா குருநாகல் ஹெரலியவல இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (நவம்பர் 1) இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் வருகை தந்த இராணுவத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதுடன், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ கீர்தினாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.
பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் முகாம் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அணிவகுப்பு சதுக்கத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டார்.அணிவகுப்பு மைதானத்தை வந்தடைந்த அன்றைய பிரதம அதிதிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் தளபதி அவர்கள் சிறப்புப் பதாதையை திரைநீக்கம் செய்தது புதிய விளையாட்டு வளாகத்தை இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரிடம் ஒப்படைத்தார். இராணுவத் தளபதி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி மற்றும் அழைப்பாளர்களுடன் இணைந்து விளையாட்டு அரங்கை பார்வையிட்டதுடன், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் வீரர்கள் வழங்கிய கராத்தே மற்றும் ஜூடோ கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து நிலையினருடனான தேநீரில் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதிக்கு தனது படையினருடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
அதேநேரம், இராணுவத் தளபதி பல குழுப் புகைப்படங்களில் அமர்ந்து முகாம் வளாகத்தினுள் மரக்கன்று ஒன்றை நட்டார்.
இந்த நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலர் கலந்து கொண்டனர்.